14ஆம் தேதி ரேஷன் குறைதீர்க்கும் முகாம்!
Pudukkottai King 24x7 |13 Sep 2024 4:26 AM GMT
அரசு செய்திகள்
புதுகை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்காக புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் குடும்ப அட்டைகள், நியாய விலை கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் தொடர்புடைய தனி தாசில்தார் வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நாளை 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது. இதில் பொதுமக்கள் குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல், அட்டை கூறும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் என் பதிவு மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை பெற கோரிக்கை மனுக்களை அழிக்கலாம். மேலும் ரேஷன் கடைகளில் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் தங்களுக்குள்ள இடர்பாடுகளை குறித்தும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story