14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர் உட்பட நான்கு பேர் கைது
Periyakulam King 24x7 |23 Dec 2024 7:07 AM GMT
கைது
ஆண்டிப்பட்டி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர் மற்றும் அவரின் தாய் தந்தை, சிறுமியின் தாய் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் கடமலை -மயிலை ஒன்றிய சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் புகாரையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தை சோந்த சேகர் என்பவரின் மகன் விக்னேஷ் கூலிதொழிலாளியான இவருக்கும் வருசநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததை தொடர்ந்து கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணவர் குடும்பத்தினர் பதிவு செய்துள்ளனர் கர்ப்பமான பெண்ணுக்கு 14 வயது என்பதால் மருத்துவமனை அலுவலர்கள் கடமலை-மயிலை ஒன்றிய சமூக நலதுறை விரிவாக்க அலுவலர் மலர்கொடிக்கு தகவல் கொடுத்தனர் இதனையடுத்து சமூகநலதுறை விரிவாக்க அலுவலர் சம்பந்தபட்ட சிறுமி வசிக்கும் வீட்டில் சென்று ஆய்வு நடத்தியதில் இருவீட்டாரும் சேர்ந்து சிறுமிக்கு திருமணம் நடத்தியது தெரியவந்தது இதனை தொடர்ந்து விரிவாக்க அலுவலர் இது குறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய விக்னேஷ் மற்றும் அவருடைய அப்பா சேகர், அம்மா மயில் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் லட்சுமி ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் மற்றும் அவரின் குடும்பத்தினர் குடும்பத்தினர் , சிறுமியின் குடும்பத்தினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story