14 வயது சிறுமி உடல் நலக் குறைவால் உயிரிழந்த பரிதாபம்

ஆர்.கே.பேட்டை தாலுக்கா இஸ்லாம் நகரில் 14 வயது சிறுமி உடல் நலக் குறைவால் உயிரிழந்த பரிதாபம்
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுக்கா இஸ்லாம் நகரில் 14 வயது சிறுமி உடல் நலக் குறைவால் உயிரிழந்த பரிதாபம். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுக்கா இஸ்லாம் நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (37). இவரது மகள் பவித்ரா( 14). இவர் ஆர்.கே.பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மயக்கம் மற்றும் வாந்தி வருவதாக தந்தை அரிகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆர்.கே.பேட்டை புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். அப்போது பவித்ராவுக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று 1-ஆம் தேதி காலை 9 மணி அளவில் ஹரி கிருஷ்ணனின் தந்தை முருகன் பேத்தி பவித்ராவை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டு விட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து மாலை 4.40 மணிக்கு பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பவித்ரா தனக்கு தலைவலிப்பதாகவும், இதனால் தாத்தாவிடம் சிறிது நேரம் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணி அளவில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மகளைப் பார்த்து தந்தை அரிகிருஷ்ணன் என்னவென்று கேட்டபோது தலைவலிப்பதாகவும் வாந்தி வருவதாகவும் கூறிவிட்டு உள்ளே சென்று படுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பவித்ரா வாந்தி எடுத்து கண்கள் மேல்நோக்கி சென்று விட்டதால் அதிர்ச்சி அடைந்து மகளை உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால் தொடர் சிகிச்சையில் இருந்த மகள் பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அரிகிருஷ்ணன் ஆர்.கே. பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story