14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது

X
குமரி மாவட்டம் நட்டாலத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கொள்ளை நடந்தது. இதேபோன்று தக்கலை, குன்னம்பாறை உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களை குறி வைத்து அடிக்கடி கொள்ளை சம்பளம் நடைபெற்று வந்தது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தந்த பகுதி சிசிடிவி காமிராக்களை ஆய்வு செயது, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனிப்பட்ட போலீசார் நேற்று ராஜாவூர் பகுதியில் வைத்து பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அந்த நபரை துரத்தி, மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த அன்பரசு (31) என்பது தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்திய போது அவர் நட்டாலம் சிவன் கோவில் உட்பட மாவட்டத்தில் 14 மேற்பட்ட கோவில்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்த ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான சூலாயுதம், 5 தங்க பொட்டுகள், குத்துவிளக்கு, வெள்ளி கொலுசு, உண்டியல் காணிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது மார்த்தாண்டம், தக்கலை, நித்திரவிளை , அருமன போன்ற காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதை எடுத்து அவரை கைது செய்து நேற்று இரவில் குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

