திருப்பூரில் 14 ஏட்டுகள் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு!

திருப்பூரில் 14 ஏட்டுகள் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு!

 பதவி உயர்வு

திருப்பூரில் 14 ஏட்டுகள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனர்.

14 ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு திருப்பூர், தமிழக காவல்துறையில் 1999-ம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்து 2014-ம் ஆண்டு தலைமை ஏட்டுகளாகி 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களில் ஏட்டுகளாக பணியாற்றி 10 ஆண்டு முடிந்த 14 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய பாண்டியன், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய காளியப்பன், ராஜா, கிருஷ்ணமூர்த்தி, 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஜெயசீலன், முரளி, திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மருதபாண்டியன், பி.ராஜா, மத்திய போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய யுவராஜ், ராமர், தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பிரபாகர், செந்தில்ராஜா, செந்தில்குமார், சி.சி.ஆர்.பி. பிரிவில் பணியாற்றிய முருகநாதன் ஆகிய 14 பேருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story