தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள்

பைல் படம் 

நடைபெற உள்ள தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 14,48,179 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 14,48,179 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 7,08,244 ஆண் வாக்காளர்களும் 7,39,720 பெண் வாக்காளர்களும் 215 மூன்றாம் பாலினத்தோர் ஆகிய அனைவரும் சேர்த்து மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர்.

விளாத்திகுளம் தொகுதியில் ஆண்கள் 102845, பெண்கள் 106607 மூன்றாம் பாலினம் 20 என மொத்தம் 2,09,472 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2048. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 136716, பெண்கள் 143338 மூன்றாம் பாலினம் 71 என மொத்தம் 2,80,125 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1881பேர். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 116665, பெண்கள் 123189 மூன்றாம் பாலினம் 30 என மொத்தம் 2,39,884 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2222. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 109476, பெண்கள் 112914, மூன்றாம் பாலினம் 3 என மொத்தம் 2,22,393 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1790.

ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 119032 பெண்கள் 124078 மூன்றாம் பாலினம் 58 என மொத்தம் 2,43,168 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2384. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 123510, பெண்கள் 129594, மூன்றாம் பாலினம் 33 என மொத்தம் 2,53,137 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1658.

Tags

Read MoreRead Less
Next Story