ரூ.1.40 கோடியில்  தோவாளை கால்வாய் நிரந்தர சீரமைப்பு

ரூ.1.40 கோடியில்  தோவாளை கால்வாய் நிரந்தர சீரமைப்பு

அமைச்சர் ஆய்வு

ரூ.1.40 கோடியில்  தோவாளை கால்வாய் நிரந்தர சீரமைப்பு அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கருவி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை கால்வாய் நிரந்தர சீரமைக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் நிரந்தரமாக சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடு மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையினை ஏற்று வெள்ள சேத பகுதிகளை நிரந்தரமாக மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பில் சுமார் 15 கி.மீ நீளத்தில் அப்பகுதியினை சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தோவாளை கால்வாய் நிரந்தரமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பொறி.ஜோதிபாசு, விவசாய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story