ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்

ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்
X
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி பகுதிகளில் மொத்தம் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி பகுதிகளில் மொத்தம் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டிலான 02 வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், இன்றையதினம் (04.01.2025) அரசின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில், தமிழகத்தில் அரசின் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு, கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் அனைத்தும், அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில், சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும், கிராமப்புறங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கெனவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் தமிழக முழுவதும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கென, முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியினை ரூ.03.00 கோடியாக உயர்த்தி வழங்கி, தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக திகழும் வண்ணம் அறிவித்தார்கள். கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்த்திடும் பொருட்டு, அனைத்து கிராமப்புறங்களிலும், நகரங்களுக்கு இணையான வசதிகளை பெற்றிடும் வகையில் மின் இணைப்புகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆராம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றினை மேம்படுத்திட சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவும், சிறப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் அனைத்து கட்டமைப்புகள் நிரம்பப்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 50 ஆண்டுகள் முன்னோக்கி செல்கின்ற வகையில், தமிழகத்தில் திட்ட செயல்பாடுகள் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் அரசின் பல்வேறு திட்டங்கள் மட்டுமன்றி, மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவும் அனைத்து அடிப்படை கட்டமைப்புக்களும் மேம்படுத்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 121 ஊராட்சிகள் 750 கிராமங்கள் மற்றும் 6 பேரூராட்சிகள் ஆகியவைகளை உள்ளடக்கியதாக உள்ளது. அதில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலான பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, அவ்வாறு நிறைவுபெற்றுள்ள பணிகள் பொதுகமக்களின் பயன்பாட்டிற்கும் அர்பணிக்கப்பட்டு வருகிறது. இன்றயை தினம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கண்டவராயன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பழையூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2024-25ன் கீழ் ரூ.07.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையும் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், ஏரியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆபத்தரனபட்டி விலக்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.07.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கண்டவராயன்பட்டி ஊராட்சியை பொறுத்த வரையில் வருடத்திற்கு சுமார் ரூ.08.00 இலட்சம் வரை வரி வசூல் செய்யப்பட்டு, அதன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் மொத்தம் ரூ.32.00 இலட்சம் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் இவ்வூராட்சிக்கு மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் அரசின் சார்பில் 24 வளர்ச்சி பணிகள் ரூ.02.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும். இதுதவிர, பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க இவ்வூராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணியும், சீரான மின்சாரம் பெறுவதற்கு ஏதுவாக ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று, ஏரியூர் ஊராட்சியில் தலா ரூ.04.00 இலட்சம் வீதம் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் ரூ.16.00 இலட்சம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இவ்வூராட்சியில் மட்டும் 84 வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.04.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கதாகும். இதுதவிர,மேற்கண்ட ஊராட்சி பகுதிகளில் கூடுதல் தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, தற்போது ஊராட்சியின் சார்பில் கோரிக்கைகளும் வரபெற்றுள்ளன. அப்பணிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினராகிய என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் அல்லது எனது சொந்த நிதியின் கீழும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்று, மக்களின் தேவைகள் அறிந்து, அதனை பூர்த்தி செய்யும் அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், ஊராட்சி மன்றத்தலைவர்கள் அபிராமிகாந்தி (கண்டவராயன்பட்டி), திருச்செல்வம் (ஏரியூர்), வட்டாட்சியர்கள் மாணிக்கவாசகம் (திருப்பத்தூர்), பரிமளம் (சிங்கம்புணரி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திர குமார், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story