142 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

X
கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 142 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.அரசு எலும்பு முறிவு மருத் துவர் பரணிதரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் பாக்யராஜ், கண் மருத்துவர் லோக நாயகி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட மருத் துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். 142 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Next Story

