தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1.44 லட்சம் மரங்கள் நடவு

தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1.44 லட்சம் மரங்கள் நடவு

தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1.44 லட்சம் மரங்கள் நடவு 

தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1.44 லட்சம் மரங்கள் நடவு

ஆரோக்கியமான மண் மற்றும் நிலையான மண் வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் உலக மண் தினம் டிசம்பர் 5ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, உலக மண் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக, தமிழகம் முழுவதும் உள்ள 61 விவசாய நிலங்களில், 1,026 ஏக்கர் பரப்பளவில் 1,44,593 மரங்கள் நடப்பட உள்ளது. காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தில் சுதாகர் என்பவருக்கு சொந்தமா 5 ஏக்கர் விவசாய நிலத்தில் 2000 ம் விலையுயர்ந்த டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் சுமார் 10,000 மரக்கன்றுகள் விவசாய நிலத்தில் நடவு செய்துள்ளனர். தற்போதைய விவசாய முறைகளால், மண்ணின் கரிம சத்தின் அளவு மிகவும் குறைந்துள்ளது, மேல் மண்ணின் அளவும் குறைந்து வருகிறது. ஒரு அங்குல மேல் மண் உருவாவதற்கு பல நூற்றாடுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

ஒரு வளமான மண்ணின் அங்கக கரிமத்தின் அளவு 3-5 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழக விவசாய நிலங்களில் 0.5 முதல் 0.7 சதவீதம் மட்டுமே உள்ளது. மண்வளப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஈஷா தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை, ஐக்கியநாடுகள் சபையால் சர்வதேச மாநாட்டில் சத்குருவும், ஈஷா பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று காலநிலை மாற்றம், மண் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இயற்கை விவசாயம் மற்றும் மரம் சார்ந்த விவசாயம் மண்வள பாதுகாப்புக்கு ஒரு தீர்வாக உள்ளதால், மர விவசாயத்தை காவேரி கூக்குரல் முன்னெடுதது வருகிறது. விவசாய நிலங்களில், வேலியோரங்களில் மரங்களை நடுவது மண் வளபாதுகாப்புக்கு ஒரு தீர்வாகும். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற டிம்பர் மரங்களை நிலம் முழுவதுமாகவோ அல்லது வேலியோரங்களில் மட்டுமோ வளர்க்க இயலும், இதன்மூலம் விவசாயிகள் எதிர்காலத்தில் நல்ல வருமானத்தையும் பெற முடியும்.

ஈஷா இதுவரை ஏறக்குறைய 9 கோடி மரங்களை விவசாயிகளுக்கு வினியோகித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் 1,01,42,331 மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 73 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகம் மற்றும் கார்நாடக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நட ஈஷா திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு ரூ. 3க்கு வழங்கப்படுகிறது. தற்போது மழைக்காலத்திற்கு தேவையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளது. மரக்கன்றுகள் பெறவும், மரம் சார்ந்த விவசாயம் குறித்து கூடுதல் தகவல்களுக்கும் 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈஷா மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story