14,784 பெண் தொழில் முனைவோர் - அமைச்சர் அன்பரசன் தகவல்

தமிழ்நாட்டில் 36,976 படித்த இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். இவர்களில் 14784 பேர் பெண்கள் என சிறு குறு தெழில்துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உபாசி இன்க்கோசர்வ் தொழிற்சாலைகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி நபார்டு வங்கியின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இரண்டு கட்டங்களாக நடந்த நிகழ்ச்சியில் முதலாவதாக ஐந்து தொழிற்சாலை தேர்வு செய்யப்பட்டு அவற்றை கட்டமைக்க 18.54 கோடி நிதி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக கரும்பாலம், மகாலிங்க பிக்கட்டி உள்ளிட்ட 10 தேயிலை தொழிற்சாலைகளை தேர்வு செய்து சுமார் 50.6 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.

தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது, நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழில் சார்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.நீலகிரி தேயிலை சிறந்த தேயிலையாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகள் நல்ல இலையை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் 36,976 படித்த இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். இதில் 14784 பெண்கள் உள்ளதாகவும் மேலும் பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையினர் புதிய தொழில் முனைவோர்களாகியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மானியத்தில் வழங்கிய சரக்கு வாகனங்களை கொடியசைத்து திறந்து வைத்தார்.

Tags

Next Story