1,492 பேர் பங்கேற்பு

X
சின்னசேலம் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் முகாமை ஆய்வு செய்து கூறியதாவது;மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களிலும் 3 முகாம்கள் வீதம் மொத்தம் 27 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொது மருத்துவம், இருதய நோய், எலும்பு மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்னைகள், தோல் நோய், மகப்பேறு, குழந்தைகள் மருத்துவம், நுரையீரல், அறுவை சிகிச்சை, கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, மனநல பிரச்னைகள், பல், சித்த மருத்துவம், இயன்முறை சிகிச்சை, கதிர் இயக்க சிகிச்சை மருத்துவம் மற்றம் சர்க்கரை நோய் உட்பட 17 வகையான நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மருத்துவ சிகிச்சை அளித்தனர். முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரத்தம் மற்றும் இ.சி.ஜி., பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது என பேசினார்.
Next Story

