15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது வழக்கு
Virudhachalam King 24x7 |10 Sep 2024 5:22 PM GMT
மகளிர் போலீசார் நடவடிக்கை
விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கட்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் மகன் தங்கத்துரை (24). இவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை அத்தை மகன் என ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து அவருடன் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சிறுமி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை திருமணம் செய்த தங்கதுரை மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story