15-வது வார்டில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுவதாலும் சாலையில் தேங்குதாலும் பொதுமக்கள் அவதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
Virudhunagar King 24x7 |22 Dec 2024 1:11 PM GMT
15-வது வார்டில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுவதாலும் சாலையில் தேங்குதாலும் பொதுமக்கள் அவதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்*
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுவதாலும் சாலையில் தேங்குதாலும் பொதுமக்கள் அவதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் விஸ்வநாததாஸ் காலனி அமைந்துள்ளது இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் பயன்படுத்தப்படாத கண்மாய் உள்ளது இந்த கன்மாயில் 15-வது வார்டுக்கு உட்பட்ட ஐ சி ஏ காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் கழிவு நீர் இந்த கண்மாயில் தேங்கி வருகிறது மேலும் இந்த கண்மாயில் மழை நீரும் தேங்கி வருவதால் தற்பொழுது அந்த கண்மாய் முழுவதும் கழிவு நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது இந்த கழிவுநீர் தற்போது சாலைகளிலும் வீடுகளுக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர் மேலும் இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் கழிவு நீரில் ஆபத்தை அறியாமல் அதில் விளையாடி வருகின்றனர் இது குறித்து பலமுறை நகராட்சி கவுன்சிலர் ரோகினி ரமேஷ் இடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது இந்த காரணத்தினால் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்த தகவல் இருந்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜாஸ்மின் மும்தாஜ் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது எடுத்து அவர்கள் கலந்து சென்றனர்.
Next Story