15ம் தேதி சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

15ம் தேதி சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X
சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் திருவெறும்பூரில் 15-ந் தேதி நடக்கிறது
திருச்சி மாவட்டத்தில் நுகர்வோர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருவெறும்பூர் தாலுகா வுக்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன கியாஸ் முகவர்கள், எண் ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் கியாஸ் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட் டம், திருச்சி திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் திருவெறும்பூர் தாலுகாவுக்குட்பட்ட கியாஸ் நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்று கொள்ளலாம். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு கியாஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரி வித்து பயன் அடையலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரி வித்துள்ளார்
Next Story