15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் உட்பட 3 பேருக்கு வலை

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் உட்பட 3 பேருக்கு வலை
X
மாணவி கொடுத்த புகாரின்பேரில், வாலிபர், அவரது சித்தி மற்றும் மாணவியின் தாய் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து
திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் விஜய் (வயது23). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், 8ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே சாதாரண பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்ததால் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இந்நிலையில், மகள் உடலில் மாற்றங்களைக் கண்ட மாணவியின் தாய், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், விஜய் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபரின் சித்தி கொடுத்த பணத்தில் தனது மகளுக்கு தாய் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில், விஜய், அவரது சித்தி மற்றும் மாணவியின் தாய் ஆகியோர் மீது லால்குடி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, தலைமறைவான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்
Next Story