அரியலூர் அருகே 15 சிறுவன் மாயம்- போலீசார் விசாரணை

அரியலூர் அருகே 15 சிறுவன் மாயம்- போலீசார் விசாரணை

மாயமான சிறுவன்

அரியலூர் அருகே 15 சிறுவன் மாயமகியுள்ளான்.

அரியலூர் மாவட்டம் சின்னபட்டாகாடு கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் அர்ச்சுணன். இவர் கடந்த 18 ஆம் தேதி சின்னபட்டாகாடு கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சென்றவர் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அர்சுணனின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் கீழப்பழூவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.

மேலும் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கீழப்பழூவூர் காவல் நிலையத்தை 94981 03384 அல்லது 94981 00713 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story