அறந்தாங்கி அருகே காதணி விழாவிற்கு 15 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை

அறந்தாங்கி அருகே காதணி விழாவிற்கு 15 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது.

அறந்தாங்கி அருகே காதணி விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி 15 மாட்டுவண்டியில் முக்கனி பழங்களும் இயற்கை நவதானியங்களுடன் சீர் கொண்டு வந்து அசத்திய தாய்மாமன்கள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணன் -ஜீவிதா தம்பதியினரின் குழந்தைகளான அர்ஷவர்தினி சிவநந்தினி இருவருக்கும் காதணிவிழா சுப்பிரமணியபுரம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.

இதனையொட்டி இவர்களது தாய்மாமன்கள் மன்னகுடி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் சண்முகநாதன் விக்னேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர்கள் குதிரையில் ஆடி வர சீர்வரிசை தட்டுகள் பாரம்பரிய முறைப்படி 15 மாட்டுவண்டிகளில் கிராமமக்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டு வந்தனர்.

சீர்வரிசை தட்டுகளில் முக்கனிகளான மா,பலா, வாழை இயற்கை நவதானிய பொருட்கள் பூக்கள் இனிப்புகள் பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தட்டுகளை தாய்மாமன்கள் மாட்டு வண்டிகளுடன் கிராம மக்கள் படை சூழல் நாதஸ்வர மேல தாளங்கள் முழங்க சீர்வரிசையாக கொண்டு வந்த தாய்மாமன்களுக்கு ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தாய் மாமன் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காதுகுத்தி உறவினர்கள் மகிழ்ந்தனர். மண்மனம் மாறாமல் பண்பாட்டை நினைவூட்டும் வகையில் மாட்டு வண்டியில் சீர் கொண்டு வந்து நடைபெற்ற காதணி விழாவிற்கு வருகை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து தாய்மாமன் தெரிவிக்கும் பொழுது தான் வெளிநாட்டில் இருந்தாலும் நம்முடைய பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என ஆசைப்பட்டு வெளிநாட்டில் இருந்து வந்து ஏற்பாடுகள் செய்ததாகவும் இதுபோன்று அனைவரும் மனம் மாறாமல் பாரம்பரிய முறைகளை நினைவுபடுத்தவே இது போன்ற மாட்டு வண்டிகளில் சீர் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story