கோ-ஆப்டெக்ஸ் சங்க பொதுபேரவை விழாவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோ -ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் 58வது பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

கோ -ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் 58வது பொது பேரவை விழா இன்று காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் முன்னிலையில் , கல்பனா வரவேற்புரை ஆற்றினார். இடது தொழிற்சங்க மாநில தலைவர் குமார் வாழ்த்துரை வழங்க பொருளாளர் குமார் வரவு செலவு விவரங்களை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து க்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொது பேரவை கூட்டம் நடைபெற்றது.

இதில் கைத்தறி ஜவுளி ரக விற்பனைக்கு சரக்கு சேவை வரியில் இருந்து முழுமையான விலக்கு அளித்தல், பணிக்கொடை தொகை முழுமைக்கும் முழுமையான வருமான வரி விலக்கு கோருதல், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் பத்தாயிரம் வழங்க கோரிக்கை, அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை ஏப்ரல் மாதம் முன் தேதி இட்டு வழங்க கோருதல் , கைத்தறி நெசவாளர்கள் மரம் அடைந்தால் குடும்ப நலநிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்குதல் , கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள், டாஸ்மார்க் ஊழியர்கள், தமிழக முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்துறை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல், உழைப்பவர் எவராயினும் குறைந்தபட்ச மாத ஊதியம் 31 ஆயிரம் ரூபாய் வழங்குதல் , தமிழக அரசு நகர பேருந்தில் இலவச பயணம் செய்யும் மகளிருக்கு அனுமதி அளித்தது போல் அறுபது வயது மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச பயணம் அளிக்க வேண்டும் , கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1-7- 2018 முதல் ஸ்கேல் ஆப் பே மாற்றியமைத்து வழங்க உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பெருமாள் உள்ளிட்ட காஞ்சிபுரம் நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டனர்.

Tags

Next Story