15 வயது சிறுவனுக்கு எய்ட்ஸ் என தவறாக மருத்துவ சான்று; பெற்றோர் புகார்

15 வயது சிறுவனுக்கு எய்ட்ஸ் என தவறாக மருத்துவ சான்று; பெற்றோர் புகார்

பைல் படம் 

சென்னை அரும்பாக்கத்தில் சிறுவனுக்கு எய்ட்ஸ் என தவறாக ரிப்போர்ட் அளித்த ரத்த பரிசோதனை மையம் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக ரத்த பரிசோதனைக்கு சென்ற சிறுவனுக்கு ‛ எய்ட்ஸ் ' என தவறான மருத்துவ சான்று அளித்த ரத்த பரிசோதனை மையம் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

வெளிநாட்டிற்கு செல்வதற்காக 15 வயது சிறுவனுக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுவனுக்கு ‛எய்ட்ஸ் ' உள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செங்கல்பட்டு சென்று சிறுவனுக்கு ரத்த பரிசோதனை செய்தனர்.

அதில், சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து, அரும்பாக்கம் தனியார் பரிசோதனை மையத்திற்கு சென்று கேட்டனர். அதில், தங்கள் மீது தவறு இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பினர். மறுநாள் மொபைல்போனில் சிறுவனின் பெற்றோரை அழைத்து, தவறாக அறிக்கை கொடுத்துவிட்டதாக கூறி மன்னிப்பு கோரி உள்ளனர். இது தொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story