ரூ.1.50 கோடி செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி

ரூ.1.50 கோடி செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி
X
வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் ரூபாய் 1.50 கோடி செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிக அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூபாய் 1.50 கோடி செலவில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன இதற்கான அடிக்கல் நாட்டு விழா பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா தங்கராஜன் தலைமையில் நடந்தது இந்நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் தங்கராஜன், மாவட்ட பிரதிநிதி ரெக்ஸ், பேரூர் துணைச் செயலாளர் தனபால் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர் கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் பலரும் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலைய திட்டம் கொண்டு வந்த தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
Next Story