கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.50 கோடி மோசடி புகார் - விசாரணை

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.50 கோடி மோசடி புகார் - விசாரணை

விவசாயி கந்தசாமி,தங்கம்மாள் 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அதே பகுதியை சேர்ந்த பெரியகாடு பகுதியை சேர்ந்த கந்தசாமி தனது பெயரில் ரூ ஒரு லட்சத்து 60 ஆயிரமும், அவரது மனைவி தங்கம்மாள் பெயரில் ரூ ஒருலட்சத்து 30 ஆயிரமும் விவசாய கடனாகவும்,ஆட்டுக்கடன் ரூ15 ஆயிரம் என ரூ 2லட்சத்து 95 ஆயிரம் கடன் பெற்றுள்னர்.

இந்த நிலையில் கடந்த 20.11.23 அன்று கடன் சங்கத்தில் வேலை, செய்து வரும் பெரியசாமி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சங்கத்தில் ஆடிட்டிங் நடப்பதாகவும் கடனை செலுத்தினால் மீண்டும் கடனும் மானிய விலையில் உரமும் தருவதாக கூறியள்ளனர், இதனை நம்பிய கந்தசாமி மற்றும் தங்கம்மாள் தங்களது கடன் தொகையான 2லட்சத்து 95ஆயிரத்தை ரொக்கமாக செலுத்தி உள்ளனர். ரசீது பின்னர் தருவதாக கூறி பெரியசாமி ரசீதும் தராமல் சங்க கணினியில் வரவு வைக்காமலம் இருந்தள்ளார் .

இந்த நிலையில் கடனுக்கு அபராத வட்டி கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்ததை அடுத்து விசாரித்த போது தாங்கள் மோசடி செய்யப் பட்டிருப்பது தெரிந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடன் பெற்ற சில விவசாயிகள் கடன் சங்கத்தில் விசாரித்து போது பெரிய மோசடி நடந்திருப்பதும் சுமார் ஒருகோடியே 50 லடசம் வரை மோசடி நடந்திருப்பதம் தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் (DR) இந்திரா, கோக்கலை சென்று விசாரிக்க சென்ற பார்த்த போது பெரியசாமி தலைமறைவாகி இருப்பதை அறிந்து எலச்சி பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகி்ன்றனர். எத்தனை பேரிடம் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்பதை 2நாட்கள் ஆய்வு செய்தால் தான் தெரியவரும் என கூட்டுறவு துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த மோசடி சம்பவத்தால் கோக்கலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story