வேடந்தாங்கல் சரணாலயத்தில் வலசை வந்த 15,000 பறவைகள்

வேடந்தாங்கல் சரணாலயத்தில் வலசை வந்த 15,000 பறவைகள்
வேடந்தாங்கல் சரணாலயத்தில் வலசை வந்த 15,000 பறவைகள்...
பங்களாதேஷ், பர்மா, இலங்கை, மற்றும் சைபிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, வேடந்தாங்கலுக்கு பறவைகள் வலசை வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள ஏரி, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு உடையது. இதில், தற்போது, 14.5 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. வளையப்புத்துார் ஏரியிலிருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு, வரத்து கால்வாய் வழியாக, நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது பங்களாதேஷ், பர்மா, இலங்கை, மற்றும் சைபிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, வேடந்தாங்கலுக்கு பறவைகள் வலசை வருகின்றன.

தற்போது கூழைக் கடா, கரண்டி வாயன், நத்த குத்தி நாரை, வர்ண நாரை, பாம்பு தாரா, வெள்ளை அருவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா உள்ளிட்ட 23 வகையான பறவைகள் வந்துள்ளன. தற்போது, 15,000த்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இதுகுறித்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வனச்சரக அலுவலர் லெஸ்லி கூறியதாவது: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், 15,000த்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. சுற்றுலா பயணியரின் வசதிக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை மற்றும் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதையடுத்து, காலையில் இறைத்தேடி வலசை சென்ற பறவைகள், கூட்டை நோக்கி மாலை 4 முதல் 6 மணியளவில் திரும்புகின்றன.தற்போது, பறவைகளின் உணவு தேவைக்காக, ஏரியில் 30,000த்திற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

Tags

Next Story