குமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 15,22,036 வாக்காளர்கள்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags
Next Story