157 இருசக்கர வாகனங்கள் ஏலம் - திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

157 இருசக்கர வாகனங்கள் ஏலம் - திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு
X

157 இருசக்கர வாகனங்கள் ஏலம் 

திருச்சி மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 157 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 11ம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவித்திருந்தனர்.

திருச்சி மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 157 இருசக்கர வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது. வருகின்ற 12.01.2024-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் 11.01.2024-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 12.01.2024-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் 18% சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து, முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண் குமார், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story