திருத்தணி நகராட்சியில் 158 நாய்களுக்கு கருத்தடை

திருத்தணி நகராட்சியில் 158 நாய்களுக்கு கருத்தடை

 நாய்களுக்கு கருத்தடை

திருத்தணி நகராட்சியில் சாலையில் சுற்றி திரியும் 158 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் 440 தெருக்கள் உள்ளன. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் மற்றும் சாலைகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சில நாய்கள் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி கடிக்கின்றன. இதையடுத்து, நகராட்சி மக்கள் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், முதற்கட்டமாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த நான்கு நாட்களில், 94 ஆண் நாய்களும், 64 பெண் நாய்களும் என, 158 நாய்கள் பிடிக்கப்பட்டது. பின், கால்நடை மருத்துவர் வாயிலாக கருத்தடை செய்யப்பட்டது. இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் கூறுகையில், “நகராட்சியில் தெரு மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு, தினமும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்படும். நேற்று முன்தினம் வரை, 158 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது,” என்றார்.

Tags

Next Story