16 வயதுக்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனைகள் தேர்வு முகாம்
Dindigul King 24x7 |26 Dec 2024 4:07 AM GMT
மாவட்டங்களுக்கு இடையேயான 20 -வது தேசிய தடகளப் போட்டிகள்
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் துரை,செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் லதா அறிவுறுத்தலின் பேரில் மாவட்டங்களுக்கு இடையேயான 20 -வது தேசிய தடகளப் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான 16 வயதுக்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனைகள் தேர்வு முகாம் திண்டுக்கல் ஜி.டி. என்.கலை கல்லூரியில் வரும் ஜனவரி 4-ந் தேதி சனிக்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் தேசிய தடகளப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவினை வரும் ஜனவரி 2-ந் தேதி மாலை 6 மணிக்குள் திண்டுக்கல் தடகள சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக மாவட்ட தடகள சங்க அலுவலர்கள் கல்யாணசுந்தரம்,சுபாஷ் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story