16 கிலோ கஞ்சா பறிமுதல் தென்காசியை சேர்ந்தவர்கள் கைது

X
திருநெல்வேலி திருவனந்தபுரம் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில், வாகன சோதனையின் போது பாளையங்கோட்டை போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். விற்பனைக்காக கொண்டு சென்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது. பாளையங்கோட்டை ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

