16 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு போக்சோ

X
வெள்ளி சந்தை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற சிறுமிக்கு வெள்ளி சந்தை பகுதியை சேர்ந்த முருகன் என்ற அரவிந்த் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, முருகன் அந்த சிறுமிக்கு காதல் வேலை வீசியுள்ளார். இதில் சிறுமியும் அந்த வாலிபரிடம் மாட்டிக் கொண்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பின், முருகன் சிறுமி வீட்டிற்கு சென்று சிறுமியை திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் முருகனை சந்தித்து இது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது முருகன் சிறுமியின் தாயை மிரட்டியதாக கூறப்படுகிறது. உடனடி தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் முருகன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதை முன்கூட்டியே தெரிந்த முருகன் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். முருகன் மீது வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

