முக்கிய சந்திப்புகளில் 16 சிசிடிவி கேமராக்கள்

முக்கிய சந்திப்புகளில் 16 சிசிடிவி கேமராக்கள்

பைல் படம் 

தூத்துக்குடியில்  கார்த்தி மக்கள் மன்றம் சார்பில் முக்கிய சந்திப்புகளில் 16 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கார்த்தி மக்கள் மன்றம் மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நிர்வாகிகள் காவல்துறைக்கு 16 சிசிடிவி புல்லட் கேமரா 217000 ரூபாய் மதிப்புள்ள கேமரா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குற்றங்களை தடுக்கவும் மக்களைப் பாதுகாக்கவும் குற்றங்களை கண்காணிக்கவும் தூத்துக்குடி 48வது வார்டு வள்ளிநாயகபுரம் 5 தெரு முதல் 6 தெரு வரை 5 கேமராக்களும் மற்றும் கணேசன் காலனி 3 சென்ட் மெயின் ரோட்டில் 4 கேமரா மற்றும் கால்டுவெல் காலனி கீழ்பகுதி 3 தெரு 3 கேமராக்களும் மற்றும் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் அருகில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 4 கேமராக்கள் நமது தூத்துக்குடியில் மொத்தம் 16 புல்லட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கேமராக்களை தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் துவக்கி வைத்தார். மேலும் நமது தூத்துக்குடி பகுதியில் முழுவதும் மத்த தெருக்களிலும் கேமரா மாற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ்ச்சியில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முகிலரசன், முத்தமிழரசன், கார்த்தி ரசிகர் மன்றம் சார்பில் பிரபாகர், சரவணன், கனல், மணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story