குமரியில் 4 நாட்களில் 16 கோடிக்கு மது விற்பனை

குமரியில் 4 நாட்களில் 16 கோடிக்கு மது விற்பனை

அதிக அளவில் மது விற்பனை


கன்னியகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட ரூ 17 லட்சம் மது விற்பனை அதிகம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 98 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 53 மது கடைகளில் பார் வசதி உண்டு. மாவட்டம் முழுவதும் உள்ள மது கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டரை கோடி முதல் 3 1/2 கோடி வரை மது விற்பனையாகின்றன. அதுவே பண்டிகை நாட்களில் டாஸ்மாக் அதிகரிக்கும். அதன்படி பொங்கல் பண்டிகை ஒட்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 16 கோடியே 33 லட்சத்தி 41 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட ரூபாய் 17 லட்சம் கூடுதலாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து நேற்று மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் கூட்டம்அதிகமாக காணப்பட்டது.

Tags

Next Story