வளர்ப்பு நாய்கள் கடித்து 16 ஆடுகள் சாவு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வளர்ப்பு நாய்கள் கடித்து 16 ஆடுகள் சாவு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உயிரிழந்த ஆடுகள் 

நாகை மாவட்டம் பனங்குடி ஊராட்சியில் வளர்ப்பு நாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் சேகுவாரா,சசிகலா,சரோஜா,ஜமுனாராணி,சிவச்சந்திரன்,மஞ்சுளா மூர்த்தி.விவசாயிகளான இவர்கள் நேற்று முன்தினம் வயலில் தனது ஆடுகளை மேய விட்டுள்ளனர்.பின்னர் வெயிலின் காரணமாக மதிய நேரத்தில் வீட்டில் இருந்துள்ளனர்.பின்னர் அவர்கள் வயலுக்கு சென்று ஆடுகளை பார்த்த போது தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டும் 16 ஆடுகள் செத்து கிடந்தன.

அப்போது அப்பகுதியில் உள்ள நாய்கள், ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது.இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சமூக பொதுமக்கள் கூறுகையில் பனங்குடி ஊராட்சி பகுதியில் வீடுகளில் உரிமம் இல்லாமல் நாய்கள் வளர்ப்பவர்கள் அதற்கு அசைவ உணவுகளையே உணவாக வழங்குகின்றனர். அவ்வாறு சில சமயங்களில் அசைவ உணவு வழங்காத நேரத்தில், அந்த நாய்கள் இதுபோன்று வயலில் மேயும் ஆடுகளை கடித்து குதறி செல்கின்றன.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story