16 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை அமைப்பு

16 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை அமைப்பு

 டிரான்ஸ்பார்மர்

16 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை அமைப்பு
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் உயர் மின்திறன் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு, மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் மின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை மாற்றிவிட்டு 25 எம்.வி.ஏ., உயர்திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி கடந்த 4ம் தேதி துவங்கியது. அதனைத் தொடர்ந்து, கடந்த 12ம் தேததி புதிய டிரான்ஸ்பார்மரை மின் விநியோகத்திற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை செய்த பின் திருவண்ணாமலை மண்டல பொறியாளர் பழனிராஜூ தலைமையில், கள்ளக்குறிச்சி மேற்பார்வையாளர் பொறியாளர் மயில்வாகனன் முன்னிலையில், டிரான்ஸ்பார்மர் துவக்கி வைக்கப்பட்டது.

Tags

Next Story