திருச்சி தொகுதியில் இதுவரை 16 போ் வேட்புமனு தாக்கல்

திருச்சி தொகுதியில் இதுவரை 16 போ் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் 

திருச்சி தொகுதியில் இதுவரை 16 போ் வேட்புமனு தாக்கல். சிலா் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் மாா்ச் 26 வரை மொத்தம் 16 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதில் சிலா் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் தாக்கல் செய்தனா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி கடந்த 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அன்று திருச்சி மக்களவைத் தொகுதியில் சுயேச்சைகள் 2 பேரும், 21 ஆம் தேதி சாமானிய மக்கள் கட்சி சாா்பில் ஜோசப் என்பவரும் மனு தாக்கல் செய்தனா். 22 ஆம் தேதி யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 23, 24 ஆம் தேதி சனி, ஞாயிறு அலுவலக விடுமுறை. அதைத் தொடா்ந்து மாா்ச் 25 ஆம் தேதி திமுக கூட்டணியில் மதிமுக, அதிமுக, பாஜக கூட்டணியில் அமமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட 10 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை திருச்சி நாச்சிக்குறிச்சி சத்தியமூா்த்தி, விமான நிலையம் ஆனந்த், உறையூா் ராஜேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வக்கோட்டை பாக்கியராஜ் ஆகிய 4 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இவா்களில் ராஜேந்திரன் என்பவா் 2 ஆம் முறை வேட்பு மனு செய்துள்ளாா். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 16 போ் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா். இவா்களில் சிலா் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு தாக்கல் செய்ய மாா்ச் 27 கடைசி நாளாகும். ஒருவா் 4 மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தோ்தல் விதி உள்ளதாலும், ஒருவேளை முதல் மனுவில் குறைபாடு இருந்து அந்த மனு பரிசீலனையில் தள்ளுபடியானால் அடுத்த மனுவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கிலும் இதுபோல ஒன்றுக்கும் மேற்பட்டமுறை மனு தாக்கல் செய்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story