பயிர் வளர்ச்சிக்கு 16 வகையான சத்துக்கள் - வேளாண்மை அதிகாரி தகவல்
பைல் படம்
தர்மபுரி வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,ஒரே ஆண்டில் பல பருவங்களில் சாகுபடி, உயர் விளைச்சல் ரகங்கள், புதிய பாசன வசதிகள் ஆகியவற்றை பின்பற்றும் போது, பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. பயிர்களின் வளர்ச்சிக்கு, 16 வகை சத் துக்கள் அவசியம். இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டை சரி செய்ய, ரசாயன உரங்களை இட யம் வேண்டிய கட்டாயம் உள்ளது.பயிர்களின் வளர்ச்சிக்கு கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட் ரஜன் என்ற தழைச்சத்து, பாஸ்பரஸ் என்ற மணி சத்து, பொட்டாசியம் என்ற சாம்பல் சத்து ஆகியவை தேவைப்படுகின்றன. இவை முதன்மை சத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.இந்த சத்துக்கள் காற்று மற்றும் நீரின் மூலம் பயிர்களுக்கு கிடைக்கின்றன.
கால்சியம் என்ற சுண்ணாம்புசத்து, மெக்னீசியம், சல்பர் எனும் கந்தகம் ஆகியவை இரண்டாம் நிலை சத்துக்களாக கருதப்படுகின்றன. இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான்,மாங்கனிசு, மாலிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண்ணூட்ட சத்துகளாக உள்ளன. தற்போது நவீன வேளாண்மையில், பயிர்க் கழிவுகள், தொழு உரம் போன்றவற்றை பயன்ப டுத்தாமல் இருப்பதால் நுண்ணூட்ட சத்துக்களின் குறைபாடு மேலும் அதிகரிக்கிறது. மண் பரிசோதனை நிலையங்களில், மண் பரிசோதனை செய்து மண்ணில் எந்த சத்து குறைபாடு காணப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப, உரங்களை இடுவது அவசியம். நிலக்கடலை, தானியப்பயிர்கள், பருத்தி போன்ற பயிர்களுக்கு பரிந்துரைக் கப்பட்ட நுண்ணுயிர் கலவையை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து அடி உரமாக விதைக்கும் முன் இட வேண்டும்
. நுண்ணூட்ட சத்துக்களை நிலத்தின் மேற்பரப்பில் இட வேண்டும்.விதைப்ப தற்கு முன்போ, நடுவதற்கு முன்போ மண்ணின் மேலாக இடவேண்டும் மண்ணில் இட்டு உழவு செய்யக்கூடாது. மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது தான் நுண்ணூட்ட உரங்களை இடவேண்டும். நுண்ணூட்ட உரங்களை பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சான கொல்லிகளு டன் கலந்து இடுவதை தவிர்க்க வேண்டும். இலை வழியாக குறிப்பிட்ட பயிர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட நுண்ணூட்ட உரம் மற்றும் கலவையை, பரிந்துரை செய்யப்பட்ட பயிரின் வளர்ச்சி பருவத்தில் மட் டும் தெளிக்க வேண்டும்.இவ்வாறாக நுண்ணூட்ட உரக் கலவையை பயிர்களுக்கு இடுவதால், பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களுக்கு ஏற்படும் சேதாரங்களை குறைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.