சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது

சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது
பைல் படம்
சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதால் ஓட்ட அனுமதித்த தந்தை, ‘ஓசி’ வண்டி கொடுத்தவர் என 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அம்மாபேட்டை எஸ்.கே.டவுன் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் பரணிதரன் (வயது 16). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குணசேகரன் (54). சிறுவன் பரணிதரன் சம்பவத்தன்று குணசேகரனின் மோட்டார் சைக்கிளை, ‘ஓசி’க்கு கேட்டு வாங்கி, அந்த பகுதியில் ஓட்டிச்சென்று உள்ளார். அப்போது அந்த பகுதியில் சென்ற அங்கப்பன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கப்பன் காயம் அடைந்து, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதித்த தந்தை குமார், ‘ஓசி’ வண்டி கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் குணசேகரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- ‘ஓசி’க்கு மோட்டார் சைக்கிள் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினாலும், சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்தியதில் சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தை குமார், ‘ஓசி’க்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் குணசேகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story