சிவகங்கை மாவட்டத்தில் 160 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - ஆட்சியர்
ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவது தொடா்பான பணி மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், பொதுத் தோ்தல் பாா்வையாளர் ஹரிஷ் ஆகியோா் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் கூறியதாவது: சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் பட்டியல்கள் வேட்பாளா்களின் முகவா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வழங்கப்பட்டன.
இந்தத் தொகுதியிலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,873 வாக்குச்சாவடி மையங்களில், 160 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 2 மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளா்களை கவரும் வகையில், மாதிரி வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்