16.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மையம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மையத்தின் கட்டடத்தின் கட்டுமான பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகள் நல மைய கட்டிடத்தை விரைந்து கட்டி முடித்து மாணவர்களின்
காரியனூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளுவாடி மற்றும் கைகளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சிறுநிலா கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மையத்தின் கட்டடத்தின் கட்டுமான பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகள் நல மைய கட்டிடத்தை விரைந்து கட்டி முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகளை தரமாக மேற்கொள்ளுமாறும், திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு அனைத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மலையாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொட்டாரகுன்று கிராமத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பணி முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீட்டின் கட்டுமான பணிகளுக்கு ஏற்ப பட்டியல் தொகைகளை பயனாளிகளுக்கு விரைந்து வழங்கிடவும் வீடு இல்லாத கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்களை கண்டறிந்து, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் பயனாளிகளாக சேர்த்து வீடு வழங்கிட வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Next Story