தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 168 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 168 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

வழக்குகளுக்கு தீர்வு 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வட்ட சட்டப்‌ பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எஸ். சந்தான கிருஷ்ணசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ். மாலதி ஆகியோர் முதல் அமர்விலும் குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. செந்தில்குமார், வழக்கறிஞர் எஸ். ஜெகதீசன் ஆகியோர் இரண்டாம் அமர்விலும் பங்கேற்றனர். இம்மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் என மொத்தம் 390 வழக்குகள் விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 168 வழக்குகளுக்கு சமரசம் காணப்பட்டது. அதில் ரூ. 2 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 425 என்ற மதிப்புக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story