169 டாஸ்மாக் கடைகளை திறக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாமக்கலில் பரபரப்பு.

பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் 169 டாஸ்மாக் கடைகளை திறக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 1 ம் தேதி முதல் டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் 169 டாஸ்மாக் கடைகளை நண்பகல் 12 மணிலிருந்து மாலை 3 மணி வரை திறக்காமல் டாஸ்மாக் தொழிலாளர்கள் 700 க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story