17 ஆண்டுகளுக்கு பின்பு சிவகாமி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்.

கும்பாபிஷேகம்
17 வருடங்களுக்கு பின் தேனி மாவட்டம் சின்னமனூரில் 1000 ஆண்டு பழமையான செப்பெடுகள் புகழ் பெற்ற அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது. இன்று 17 ஆண்டுகளுக்கு பின் சிவகாமி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இந்து அறநிலைத்துறை சார்பாக மிக விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வாங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது 17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் சின்னமனூர் மட்டுமல்லாது தேனி மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.
Next Story