17 வயதுடைய மாணவி மாயம்

X

மதுரை வாடிப்பட்டி அருகே 17 வயது மாணவி மாயம் என தந்தை புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சொசைட்டி தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரின் 17 வயது மகள் பதினொன்றாம் வகுப்பு படித்து முடித்து இருக்கிறார். இவரது பெற்றோர் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று( ஜூன்.9)காலை 10 மணி அளவில் வீட்டிலிருந்த 2 லட்சம் மற்றும் 30 நகையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை நேற்று மாலை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்துடன் சென்றுள்ள இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்
Next Story