17 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சள் பை

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேதாரண்யம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம் நடேசனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி, தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மருதூர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 17 பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு, வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தனது சொந்த செலவில் வழங்கிய மஞ்சள் பை மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார், ஆத்மா குழு உறுப்பினர் சதாசிவம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனனாட், வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் சுந்தரராஜன், ஆசிரியர் செந்தில் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கும் திட்டம், படிப்படியாக அனைத்து பள்ளியிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படும் என மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தெரிவித்தார்.
Next Story

