பொது சுகாதார துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்

X
சுகாதார பேரவை கூட்டம்
தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்ட உலக வங்கியின் நிதி உதவியுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் சுகாதார பேரவை நடைபெற்று வருகிறது. கடந்த 2021,2022 ஆம் ஆண்டில் சேலம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. சேலம் மாவட்டத்தில் முதல் சுற்றாக 2021 ஆம் ஆண்டு நடந்த மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனை ஒருங்கிணைப்பு குழு பரிசீலித்து எடுக்கப்பட்ட 17 சுகாதார திட்ட அறிக்கைகள் மாநில சுகாதார பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பாண்டு கடந்த மார்ச் 8ம் தேதி நடந்த சுகாதார பேரவையில் 68 திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மாநில சுகாதார பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று மூன்றாவது சுற்று சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்ட அறிக்கையில் ஆராயப்பட்டு மாநில சுகாதார பேரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் சுகாதாரப்பணி துணை இயக்குனர் சவுண்டம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
