பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி !

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி !

பண மோசடி

தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் விக்னேஷ். இவா் தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 2 மாதங்களுக்கு முன் கைப்பேசி வழியாக விக்னேஷை தொடா்பு கொண்ட நபா், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகத் தெரிவித்தாா். இதை நம்பிய விக்னேஷ், அந்த நபரின் வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.17 லட்சத்தை அனுப்பினாா்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விக்னேஷ், முதலீடு செய்த பணத்தை திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டாராம். பின்னா், அந்த நபா் கைப்பேசியை அணைத்து வைத்தாா். இதுகுறித்து விக்னேஷ், திண்டுக்கல் இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் உதவி ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா்.

Tags

Next Story