ரூ.17.20 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்

X
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-4, வார்டு-32 மற்றும் 33-க்குட்பட்ட கடப்பேரி பகுதியில் ரூ.17.20 கோடி மதிப்பீட்டில் 3 கி.மீ. நீளத்திற்கு புதிய வடிகால் அமைக்கும் பணியினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ. காமராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர்கள், நகர மன்ற துணைத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story

