காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17.48 லட்சம் வாக்காளர்கள்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17.48 லட்சம் வாக்காளர்கள்

பைல் படம் 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17,48, 866 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பே கடந்த மூன்று மாத காலமாகவே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் துவக்கி வாக்காளர் சேர்த்தல் நீக்கல் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம்களை தமிழக முழுவதும் நான்கு கட்டங்களாக நடத்தியது.

அதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்கள் வெளியிடப்பட்டு அது குறித்தும் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 8 லட்சத்து 53 ஆயிரத்து 456 ஆண்‌ வாக்காளர்களும் , 8 லட்சத்து 95 ஆயிரத்து 107 பெண் வாக்காளர்களும் , 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17,48, 866 வாக்காளர்கள் இறுதியாக உள்ளனர்.

சட்டமன்றத் தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் : காஞ்சிபுரம் : 3,11,959 , உத்திரமேரூர் : 2,67,012 , செங்கல்பட்டு : 4,21729 , திருப்போரூர் : 3,01,935 , செய்யூர் : 2,21,516 , மதுராந்தகம் : 2,24,715 மொத்த வாக்காளர்கள் : ஆண் : 8,53,456 பெண் : 6,95,107 இதரர் : 303 மொத்தம் : 17,48,866 காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியிலே அதிக வாக்காளர்களாக 4,21,729 வாக்காளர்களும் , குறைந்தபட்சமாக செய்யூர் தொகுதியில் 2,21,516 வாக்காளர்களும் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story