17கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் - கடைக்கு சீல்வைப்பு
17கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்
சீர்காழி அருகே கொண்டத்தூர் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட 17கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்,கடைக்கு சீல்வைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை செய்யப்படுவதாக, வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்துக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கொண்டத்தூர் கிராமத்தில்,பல்வேறு கடைகளில் சோதனையிட்டனர். அப்பொழுது அபுதாஹிர் கடையில் சோதனை செய்த போது, தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் ஆகிய 17கிலோ புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய மறைத்துவைத்திருந்ததை, பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலையம் கொண்டு வந்து வழக்குபதிவு செய்தனர். பின்னர் அபுதாஹிரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அபுதாஹிர் கடைக்கு, சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் 9ரஜினி, முன்னிலையில் வருவாய்த்துறையினர் சீல்வைத்தனர்.
Next Story