வேலூரில் விவசாயநிலத்தில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

வேலூரில் விவசாயநிலத்தில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு


வேலூர் அருகே விவசாய நிலத்தில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.


வேலூர் அருகே விவசாய நிலத்தில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

வேலூர் அருகே விவசாய நிலத்தில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு : வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கண்டிப்பேடு என்ற கிராமத்தில் இன்ற விவசாய நிலத்தில் விவசாயிகள் வரப்பை சரி செய்து கொண்டிருக்கும் போது 2.5அடி ,அகலமும் நீளம் 3 அடி அளவு கொண்ட பெண் சிற்பம் மற்றும் ஆண் சிற்பம் கையில் கூர் வாலுடன் நின்ற கோலத்தில் நடுகல் இருப்பதை அறிந்தனர்.

இதனை அப்பகுதி விவசாயிகள் காட்பாடி வருவாய் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் உடனடியாக அந்த நடுக்கல் காட்பாடி வருவாய் துறையினர் மீட்டு வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். இந்த நடுகல் வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாற்றிய சரவணன் கூறும் பொழுது, இந்த நடுக்கல் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் இதுவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் 18 நடுகல் கண்டறிந்து அவற்றினை அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது 19 வது நடுக்கல் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த நடுக்கல் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் சரவணன் கூறினார்.

Tags

Next Story