18 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

X
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களிடம் திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க அவர் இல்லத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் உடனடியாக அப்பகுதிகளுக்கு சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்கு வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார். அப்போது ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஜி.நடுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த 18 குடும்பங்களுக்கு குடியிருக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியை சேர்ந்த 18 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியதுடன் உடனடியாக அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வழங்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் இந்தியாவிலேயே குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க அவர்கள் குடியிருக்க வீடுகள் கட்டிக்கொடுக்கும் ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி நாயகர் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக ஆட்சியே என்றார். நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல், வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபானி, ஆத்தூர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ரெட்டியார்சத்திரம் மணி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மகேந்திரன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் துணை பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story

